போதி தர்மர் என்றால் நம்மில் பலருக்கு 7ம் அறிவு திரைப்படம் தான் நினைவில் வரும். சீனாவை மெய்சிலிர்க்க வைத்த தமிழன் இவரே. சில வரலாறு தகவல்கள்..!
கிட்டத்தட்ட 5ம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான் கந்தர்வன் என்னும் பல்லவ மன்னன். இவருக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதிதருமன். இவரது இயற்பெயர் புத்தவர்மன்,என்றும் சில குறிப்புகள் கூறுகிறது.
இளம் பருவத்திலேயே சகல கலைகளையும் கற்றுத் தேர்ந்தார், போதிதர்மன். அதில் களறி, வர்மம் போன்ற அதிரடிக் கலைகளும் அடங்கும். தான் வளரவளர புத்தரின் போதனைகளால் ஈர்க்கப்பட்ட அதன் காரணமாக அவர் ஒரு புத்தத் துறவியாக மாற விரும்பினார்.
அவர் தன் எண்ணத்தை தன் தந்தையிடம் தெரிவிக்க, இதனால் பெரும் துயர் உற்றார் கந்தர்வ மன்னன். இந்த மாபெரும் அரண்மனையில் வாழவேண்டிய என் அன்பு செல்வமே ஏன் மரணத்தை நோக்கி செல்ல விரும்புகிறாய் என கண்ணீர் மல்க கேட்டார் அந்த அரசர்.
நான் மரணத்தை நோக்கிச் செல்லவில்லை தந்தையே மரணத்திற்கு அப்பால்உள்ள உண்மைகளை அறிய விரும்புகிறேன் என்றார் போதிதர்மர். அரண்மனையில் வாழ்பவர்கள் உடைய மரணம் மண்டாதா, மரணம் என்பது அனைவருக்கும் ஒருநாள் நிகழத்தான் போகிறது என்றார் போதிதர்மர்.
எத்தனை பெரிய பல்லவ சாம்ராஜ்யத்தின் வாரிசு, உன்னுடைய கேள்விகளுக்கு என்னிடம் விடை இல்லை ஆனால் ஏதோ ஒரு உன்னதமான நோக்கத்திற்கு செல்ல வேண்டும் என்று நினைக்கிறாய் உன்னை ஆசீர்வதித்து அனுப்புவதைத் தவிர எனக்கு இப்பொழுது வேறு வழி இல்லை என்று கூறி போதிதர்மனை அனுப்பி வைத்தார்.
மரணம் குறித்தும், மரணத்திற்கு அப்பால் நடக்கும் நிகழ்வுகள் பற்றியும் போதி தர்மருக்கு இருந்த பல சந்தேகங்களை புத்த மடத்தில் 27வது பிரதான குருவான பெண் ஞானி பிராணநாதா சில காலத்திற்கு பிறகு தீர்த்து வைத்தார்.
சில காலத்திற்குப் பிறகு போதிதர்மன் புத்தமடத்தில் 28வது குருவானார். அதன்பிறகு போதிதர்மர் சீனாவுக்குச் சென்று மக்களுக்கு பணியாற்றும்படி பிராணநாதா கூறியிருந்தார். அவரின் கோரிக்கையை ஏற்று போதிதர்மர் சீனா சென்றடைந்தார்.
சீனா சென்றவுடன் புத்த துறவிகள் இணைந்து தங்கியிருந்த கோவிலில் தங்க வில்லை. மாறாக ஒரு மலைக் குகையை தேர்ந்தெடுத்து அதில் 9 ஆண்டுகள் தவம் மேற்கொண்டார். அதன் பிறகு சில காலம் கழித்து அவர் தன்னை ஷாவ்லின் கோவிலில் இணைத்துக்கொண்டார்.
அங்கேயே பல ஆண்டுகள் தங்கி புத்த மதத்தின் சிறப்புகள் குறித்து மக்களிடம் எடுத்துரைத்தார். அதோடு தான் கற்றிருந்த பல மருத்துவ குறிப்புகளையும் அற்புத கலைகளையும் சீனர்களுக்கு அவர் கற்பிக்க துவங்கினார். அப்படி அவர் ஒன்று கற்றுக் கொடுத்த கலைகளில் ஒன்றுதான் குங்ஃபூ.
சீனாவில் இருந்த காலத்தில் அவர் பல தத்துவங்களோடு விளங்கினார். அவரின் உரையை கேட்டு மக்கள் நிறைய பேர் ஆர்வம் கொண்டனர். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தன் மனதில் உள்ளதை அப்படியே கூறும் ஒரு மிகச்சிறந்த துறவியாக விளங்கினார் போதிதர்மர்.
பொதுவாக அவர் உரையாற்றும் பொழுது மக்களை பார்த்து பேசுவது கிடையாது, மாறாக சுவற்றை பார்த்து தான் பேசுவார். யார் வருகிறார்கள், யார் போகிறார்கள், யார் சந்தேகம் கேட்கிறார்கள், இப்படி எதையும் அவர் கண்களால் பார்ப்பது கிடையாதாம்.
தன் உள் மன பார்வையில் மட்டுமே அக்கறை கொண்டு சுவற்றுடன் பேசிக் கொண்டிருப்பார். சீனர்கள் பலர் இவரின் சீடராக ஆவதற்கு பேரார்வம் கொண்டவர். ஆனால் போதிதர்மர் தன்னுடைய முதல் சீடனை 9 ஆண்டுகள் கடந்த பிறகே கண்டறிந்தார் என்றும் கூறப்படுகிறது.
சீனாவில் போதிதருமன் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்தார் என்றும் கூறப்படுகிறது. அவர் சீனாவில் வாழ்ந்த காலம் முதல் இன்றுவரை அவரை சீன மக்கள் அனைவரும் தாமு என்று அழைக்கின்றனர். போதிதர்மர் எப்படி இறந்தார் என்பது குறித்த தகவல் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
அவர் இறக்கவில்லை மாறாக தன் உயிரை அவரே தன்னுடைய உடலில் இருந்து வெளியேற்றினார் என்று சிலர் கூறுகின்றனர். வேறு சிலரோ அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டார் என்றும் கூறுகின்றனர். அதோடு அவர் இறந்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உயிர் பெற்று இமாலய மலையை நோக்கி சென்றார் என்ற ஒரு செவ்விழி கதையும் உண்டு.
இதில் எது உண்மை என்பது தெரியவில்லை. போதி தர்மருக்கு முன்பும் அவருக்குப் பின்பும் புத்த பீடத்தில் பல குருமார்கள் இருந்துள்ளனர். ஆனால் அவருடைய பெயரும், புகழும் மட்டுமே பல்லாயிரம் ஆண்டுகளை கடந்தும் நிலைத்திருக்கின்றது. போதி தர்மனை பொருத்தவரை ஞானம் என்பது கடின உழைப்பும், விடாமுயற்சியும், சுறுசுறுப்போடு செயல்படுவது ஆகும்.
புத்தமதம் சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக அளவில் பரவியுள்ளது. இது போன்ற நாடுகளில் உள்ள மனிதர்கள் இதை அடிப்படையாகக் கொண்டே இயங்குகின்றன. அதனால் அவர்கள் கடின உழைப்பாளிகளாகவும் எப்போதும் சுறுசுறுப்போடும் இயங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.