வங்காளதேசஅணியானது தென்ஆப்பிரிக்காவுடன் டெஸ்ட் போட்டியில் இன்று மோதியது . இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. தென்ஆப்பிரிக்கா அணியின் முதல் ஆட்டக்காரர்களாக சரல் எர்வீ மற்றும் கேப்டன் டீன் எல்கரும் ஆடத்தொடங்கினர். இதில் சரல் எர்வீ 41 ரன்கள் எடுத்தும் அணியின் கேப்டனான எல்கர் 67 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள்.
இதையடுத்து அடுத்த ஆட்டக்காரர்களான ரியான் ரிக்கல்சன் 21 ரன்னிலும் மற்றும் கீகன் பீட்டர்சன் 19 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர். தென் ஆப்பிரிக்கா அணியானது 4 விக்கெட் இழப்பிற்கு 76 .5 ஓவர்களில் 233 ரன்கள் எடுத்த நிலையில் சரியான வெளிச்சம் இல்லாத காரணத்தினால் ஆட்டத்தை முடித்துக்கொண்டனர். கைல் வெரின் 27 ரன்கள் எடுத்தும் தெம்பா பவுமா 53 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளவாறு இரண்டாம் நாள் ஆட்டம் நாளை நடைபெற உள்ளது.