Categories
மாநில செய்திகள்

“போதைக்கு அடிமை ஆவது தான் அவமானம்.. திருத்திக் கொள்வது அவமானம் அல்ல”… அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சு…!!!!!!

போதை விழிப்புணர்வு பிரச்சார பயணம் பற்றி போஸ்டரை தொடங்கி வைத்த பின் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, ஒவ்வொரு வருடமும் பள்ளிகள் தொடங்கும் போது விழிப்புணர்வு நிகழ்ச்சியோடு தொடங்கும். தொலைக்காட்சிகளும் புதுமையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் அதில் நாங்களும் கலந்து கொள்வோம். மேலும் கற்றல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்து வருகின்றோம் போதையில் ஈடுபட்டவர்கள் உடன் இருப்பவர்கள் சொல்வதைக் கேட்டு விளையாட்டாக தான் ஆரம்பிக்கின்றார்கள்.

போதைக்கு அடிமையாவது தான் அவமானம் அதனை திருத்திக் கொள்வதற்காக மருத்துவரை அணுகுவது அவமானம் இல்லை. அதேபோல போதை இல்லாத பாதை இயக்கம் சார்பில் போதை இல்லா தமிழகத்தை உருவாக்க அக்டோபர் இரண்டாம் தேதி தழுவிய போதை விழிப்புணர்வு பிரச்சார பயணம் சென்னையில் தொடங்க இருக்கிறது. மேலும் தென்காசி மாவட்டம் பாஞ்சால்குளம் பள்ளியில் நடந்த தீண்டாமை விவகாரம் பற்றி முதன்மை கல்வி அலுவலரிடம் விளக்கம் கேட்டிருக்கின்றோம். சம்பவம் நடைபெற்ற நாளில் 12 மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என விளக்கம் கேட்டிருக்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |