போதைப் பொருள் கடத்தியதாக ரஷியாவின் பிரபல மாடல் அழகி கிறிஸ்டினா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ரஷியா நாட்டின் பிரபல மாடல் அழகி கிறிஸ்டினா துகினா. 34 வயதான இவர் கடந்த 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மிஸ் துபாய் அழகி போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் கிராண்ட் பிரிக்ஸ் மிஸ் பெடரேஷன் அழகி பட்டத்தையும் வென்றுள்ளார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் நடைபெற்ற அழகுப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் மாடல் அழகியான கிறிஸ்டினா துகினா போதைப்பொருள் கடத்தியதாக ரஷியா போலீசாரால் கைது செய்யப்பட்டு அவர் மீதான வழக்கு நடைபெற்று வருகிறது. கிறிஸ்டினாவிடம் அரை கிலோ மெபெட்ரோன் என்ற போதைப்பொருள் இருந்ததாக கூறப்படுகின்றது. மேலும் இந்த வழக்கில் அவருக்கு 20 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.