Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் கடத்தி வந்த வாலிபர்…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

சட்டவிரோதமாக போதைப்பொருள் கடத்திய  5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே நேற்று காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சுற்றி திரிந்த வாலிபரை காவல் துறையினர் பிடித்து விசாரணை செய்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பதும்,டெம்போவில் சட்டவிரோதமாக குட்கா கடத்தி வந்ததும்  தெரியவந்தது.

இந்நிலையில் ஆறுமுகம் ஓட்டி வந்த டெம்போவை வழிமறித்த சிலர் ஆறுமுகத்தை   கடத்தி விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். ஆனால் ஆறுமுகம் அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அந்த விடுதிக்கு சென்று அங்கு ஆயுதங்களுடன் பதுக்கி இருந்த அருண்குமார், சுப்பிரமணியன், முத்துக்குமார் மற்றும் ஆறுமுகம்  உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல்  செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |