கேரளாவில் குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின், கண்ணூர் மாவட்டம் கரிம்பத்தை சேர்ந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பரான அஷ்ரப் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக அந்த பெண் அளித்த வாக்குமூலத்தில் “கடந்த 16 வருடங்களாக தனது கணவரும், அவரது நண்பர் அஷ்ரப்பும் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருகிறார்கள். 2021 ஆம் ஆண்டு தன்னை பைக்கில் அழைத்துச் சென்று கீழே தள்ளி கணவர் கொலை செய்ய முயன்றதாகவும் கூறியுள்ளார்.
கணவர் மற்றும் நண்பர் அஷ்ரப் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது மட்டுமில்லாமல் தனது கணவர் மற்றும் நண்பர் சேர்ந்து பெண்ணிற்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுத்து சித்திரவதை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரங்கேறும் போது அந்த பெண்ணுக்கு ஒன்றரை வயது குழந்தை இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.