Categories
தேசிய செய்திகள்

போதைப்பொருள் வழக்கு – நடிகை ராகிணியின் நண்பரிடம் மீண்டும் விசாரனை

பெங்களூருவில் கடந்த 2018 ஆம் ஆண்டு போதைப்பொருள் சிக்கியது தொடர்பான வழக்கில் தற்போது போதைப்பொருள் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ராகினி திவேதியின் நண்பன் ரவிசங்கரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கன்னட திரையுலகினர் போதைப்பொருள் பயன்பாடு தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் ராகினி திவேதியின் நண்பரும் வட்டாரப் போக்குவரத்து ஊழியருமான ரவிசங்கர், சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல் போதைப்பொருள் விற்பனையாளர்கள் உட்பட சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு பெங்களூரில் போதைப்பொருள் சிக்கிய வழக்கிலும் ரவிசங்கருக்கும் தொடர்பு இருப்பதை பற்றி மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவரை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் நீதிமன்ற அனுமதியுடன் இன்று முதல் வரும் 16-ம் தேதி வரை விசாரணை நடத்த உள்ளனர். இதனிடையே சிறையில் ஒரே அறையில் அடைக்கப்பட்டிருந்த சஞ்சனா ராகினியிடையே மோதல் ஏற்பட்டதால் இருவரும் தனித்தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |