ஆரியன்கான் வழக்கில் போதை பொருட்கள் பறிமுதலை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை என சிறப்பு நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஜாவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இது தொடர்பான தீர்ப்பில் போதைப்பொருட்களை பறிமுதல் செய்யும் போது அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் இல்லாததால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டபோது அவருடன் கைது செய்யப்பட்ட சதிஜாவிடம் இருந்து 4 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது. கைது நடவடிக்கையின்போது அங்கீகரிக்கப்பட்ட பெண் அதிகாரி இல்லாததால் விதிமீறல் நடைபெற்றிருப்பதாகவும், நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அளித்துள்ள வாட்ஸ்-அப் உரையாடல்களின் படி போதைப்பொருள் பயன்பாடு மட்டுமே நடை பெற்றதாகவும் விற்பனை, கொள்முதல் போன்ற எந்த கடத்தல் நடவடிக்கையும் நடைபெறவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.