போதை பொருள் தடுப்பு பற்றி மாணவர்களுக்கு சிறப்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள காகுபத்தில் அரசு இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் வைத்து போதை பொருள் விழிப்புணர்வு பற்றிய சிறப்பு விழா ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் நீதிபதி பூர்ணிமா, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ நாதா, மக்கள் நீதிமன்றத்தின் நீதிபதி சந்திரன், போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பத்மஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டு போதைப்பொருள் விழிப்புணர்வு பற்றி சிறப்புரை ஆற்றியுள்ளனர்.
மேலும் மாஜிஸ்திரேட்டு அருண்குமார், நீதிபதிகள் பிரபாதாமஸ், வழக்கறிஞர் சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் செந்தில், உதவி பேராசிரியர் பெமீனாசெல்வி ஆகியோரும் இந்த விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட கல்வித் துறை அலுவலர் சுந்தரமூர்த்தி, முதன்மை சார்பு நீதிபதி விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு போதைப்பொருள் தடுப்பு பற்றி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.