Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி…. திரளானோர் பங்களிப்பு….!!

பள்ளியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் வைத்து போதைப்பொருள் விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வட்டார வள மைய அலுவலர் கீதா தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் இளைஞர்களை புரிந்து கொள்ளுதல், போதைப்பொருட்களின் தாக்கம், போதைப் பொருட்களை ஒழிக்க வேண்டியதின் அவசியம், ஆரோக்கிய வாழ்விற்கான வாழ்க்கைத்திறன்கள் போன்றவைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சீனிவாசன், காமராஜ், முதுநிலை ஆசிரியர் சுதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |