உலக நாடுகளில் போதைப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி உள்ளார்.
பாலிவுட் திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்தியா மீதான டிரம்ப் குற்றச்சாட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில் இந்தியா, ஆப்கானிஸ்தான், மியான்மர், கொலம்பியா, கோஸ்டாரிகா, வேமணிகன், ரிபப்ளிக், வெனிசூலா பொலிவியா உள்ளிட்ட 20 நாடுகள் போதைப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப் பொருள் உற்பத்திக்கு எதிரான சர்வதேச ஒப்பந்தத்தை மீறி வெனிசுலா, பொலிவியா, செயல்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் கொலம்பியா அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. போதைப் பொருட்களின் உற்பத்தி பெரு நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது. எனினும் அதை தடுப்பதற்காக அமெரிக்காவுடன் இணைந்து அந்நாடு செயல்பட்டு வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் உற்பத்திக்கு எதிராக மெக்சிகோ அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.