Categories
தேசிய செய்திகள்

போதைப் பொருள் வழக்கு…. நிபந்தனைகளுடன் ஜாமீன்…. சிறையிலிருந்து வெளியேறிய ஆர்யன் கான்….!!

போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆரியன் கானுக்கு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் கிடைத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைபொருள் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போதைபொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஆரியன் கான் ஜாமீன் கோரி மும்பை சிறப்பு போதைபொருள் தடுப்பு நீதிமன்றத்தில் இரண்டு முறை வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் அவரது ஜாமின் மனு இரண்டு முறையும் நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் ஆரியன் கான் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். இந்த மனு குறித்து விசாரணை நடத்திய மும்பை உயர்நீதிமன்றம் ஆரியன் கானுக்கு கடுமையான நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீன் அளித்து உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஆரியன் கானுக்கு ஜாமீன் கிடைத்ததை தொடர்ந்து சட்ட ரீதியான சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஆரியன் கான் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.

Categories

Tech |