Categories
மாநில செய்திகள்

போதைப் பொருள் விழிப்புணர்வு…. இருசக்கர வாகனத்தில் பிரச்சாரம்…. குவியும் வாழ்த்து….!!!

இருசக்கர வாகனத்தில் ஒருவர் போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

சென்னையில் உள்ள ஷெனாய் நகரத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் இந்திய சமூக சேவை சங்கம் என்ற அமைப்பினை ஆறுமுகம் நடத்தி வருகிறார். இவர் தற்போது போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார். இவர் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் இருந்து திருவள்ளுவர் வரை மோட்டார் சைக்கிளில் போதைப்  பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்துள்ளார்.

இவர் பொதுமக்கள் அதிகமாக கூடும் பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில்  போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். இவர் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் தனது இருசக்கர வாகனத்தில் சென்று போதைப் பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் என கூறியுள்ளார். இவர் போதைப் பொருள் விழிப்புணர்வை மக்களிடையே  ஏற்படுத்துவதால் திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ வி.ஜி ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் ஆறுமுகத்தை வாழ்த்தியுள்ளனர்

Categories

Tech |