Categories
உலக செய்திகள்

போதையில் அரை நிர்வாணமாக நின்ற வாலிபர்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

கனடாவில் போதையில் இருந்த வாலிபர் இளம்பெண்ணை கத்தியால் சரமாரியாக குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள Manitoba பகுதியைச் சேர்ந்த Brittany Bung எனும் இளம்பெண் ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சமையல் கலை பயின்று அதன் மூலம் சொந்தமாக காபி ஷாப் தொடங்க வேண்டும் என்ற கனவு இருந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று வேலைக்கு சென்று கொண்டிருந்த Brittany காரில் பெட்ரோல் நிரப்புவதற்காக பெட்ரோல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு இளைஞர் ஒருவர் சட்டை கூட போடாமல் பெட்ரோல் நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் Brittany கார் வந்ததை கண்ட அந்த இளைஞர் திடீரென Brittany-யாவின் காரில் ஏறி அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி காரை எடுக்குமாறு கூறியுள்ளார்.

அதில் பயந்து போன Brittany அந்த இளைஞர் கூறியதுபடி காரை எடுத்து சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் சிறிது தூரம் சென்று கொண்டிருந்த போது அந்த இளைஞர் திடீரென கையில் வைத்திருந்த கத்தியால் Brittany-வை சரமாரியாக குத்தியுள்ளார். அதில் Brittany-யாவிற்கு பலத்த காயங்கள் ஏற்பட்ட போதிலும் அவர் அவசர உதவிக்காக காரிலிருந்து இறங்கி ஆம்புலன்சை அழைத்துள்ளார். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அந்த இளம்பெண் பரிதாபமாக இறந்து விட்டார். இதற்கிடையே Brittany-யாவை கத்தியால் சரமாரியாகக் குத்திய அந்த இளைஞருடைய பெயர் jordan Belyk என்று தெரியவந்தது. மேலும் அந்த இளைஞர் தனது 12 வயதில் தன் கண்முன்னே தாய் கொல்லப்பட்டதால் கடுமையான போதைக்கு ஆளாகியுள்ளார் என்பதும் தெரிந்தது.

இதுகுறித்து அந்த இளைஞர் கூறும் போது தன்னுடைய போதையால் ஒரு உயிர் பரிதாபமாக பரிபோனதை அறிந்து நான் மிகவும் வருந்துகிறேன் என்றார். ஆனாலும் அந்த இளைஞரால் ஒரு உயிர் பலியாகி விட்டதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றவாளியான அந்த இளைஞருக்கு 12 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்குமாறு வக்கீல்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து அந்த வழக்கை மே மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |