சென்னை மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு இரவு நேரத்தில் மக்கள் வருவது அதிகமாகி விட்டது. முக்கியமாக விடுமுறை நாட்களில் பொது மக்களின் வருகை அதிகமாகவே உள்ளது. எங்க வச்ச இந்நிலையில் நேற்று இரவு பரபரப்பான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.கண்ணகி சிலை அருகே நேற்று இரவு 10 மணி அளவில் பெண் ஒருவர் குடிபோதையில் தனது கணவருடன் அரை நிர்வாணத்தில் திடீர் என்று போராட்டம் நடத்தினார். அவர் அரை நிர்வாண கோலத்தில் சுற்றி கொண்டிருந்ததை கண்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அந்தப் பெண் எதற்காக இந்த மாதிரி செய்கிறார் என்று மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்தனர்.
அதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கணவர் மற்றும் மனைவியை தடுத்து நிறுத்திய போது அவர்களிடம் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் விசாரணையில்,தனது கணவரை சிலர் அடித்து விட்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி நடந்து கொண்டதாக அந்த பெண் கூறியுள்ளார்.இந்த சம்பவங்களை செய்யும் போது அந்தப் பெண் மது போதையில் இருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.