Categories
மாநில செய்திகள்

போதையில் இருந்தால் அனுமதிக்காதீர்கள்..! நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது – காவல்துறை அறிவுரை.!!

நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளதாக ஹோட்டல் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் 80 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. நட்சத்திர ஓட்டல்களில் உள்ள நீச்சல் குளம் அருகே எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது. நள்ளிரவு ஒரு மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது.  ஆம்புலன்ஸ் சேவையோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். காவல்துறை தரப்பில் தரப்படும் qr code ஐ குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களின் கார்களில் ஓட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் நட்சத்திர ஹோட்டல் உரிமையாளர்களுடன் சென்னை காவல்துறை ஆலோசனை நடத்தியது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் காவல்துறை விதித்துள்ள நிபந்தனைகள் குறித்து ஹோட்டல் நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது, ஓட்டல்களில் 80 சதவீதம் பேரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1 மணிக்கு மேல் நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டம் கூடாது என்றும் தெரிவித்தனர். நீச்சல்குளம் பக்கத்தில் எந்த நிகழ்ச்சியையும் நடத்தக்கூடாது என்றும், வைப்பது போல இருந்தால் பேரிகார்டு வைத்து ஸ்விம்மிங் ஃபுல் பக்கத்தில் போகாதபடி வைக்க வேண்டும். தற்காலிக மேடை எதுவும் போடக்கூடாது, போடுவது மாதிரி இருந்தால் தகவல் சொல்லிவிட்டு செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்ததாக கூறினர்.

மேலும் அதிக போதையில் உள்ள நபர்களை உள்ளே அனுமதிக்காதீர்கள், அதேபோல் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஒருவர் காரில் செல்கிறார் என்றால் அவர் அதிகமான போதையில் இருந்தால் கார் டிராப் அரேஞ்ச் செய்து கொடுங்கள் என்று கூறினார்கள். பெண்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாதவாறு புத்தாண்டு கொண்டாட்டம் இருக்க வேண்டும். ஈவ்டீசிங் எதுவும் நடக்கக்கூடாது, போதுமான அளவு செக்யூரிட்டி போட்டு கண்காணிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஸ்டார் ஹோட்டல் பக்கத்திலேயே போலீஸ் அரேஞ்ச் பண்றேன்னு சொல்லி இருக்காங்க, அவங்க நம்பரை வாங்கி வைத்து கொண்டு உடனே அவர்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.

ஆம்புலன்ஸ் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், அளவுக்கு அதிகமாக குடித்து வைத்துவிட்டு மயங்கி விழுந்தாலோ,  ஹோட்டலுக்கு வெளியே பைக் விபத்து ஏற்பட்டாலோ உடனே 100 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு சொல்ல சொல்லி இருக்கிறார்கள். அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் விபத்து ஏற்படும் என்பதால் அதை தவிர்ப்பதற்காக காவல்துறை தரப்பில் qr கோடு தரேன் என்று சொல்லி இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.

Categories

Tech |