வடமாநில தொழிலாளி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார் கடந்த 19-ஆம் தேதி போதையில் தனது அறையில் தவறிக் கீழே விழுந்து விட்டார்.
இதனை அடுத்து காயமடைந்த விஜயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி விஜயகுமார் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.