நண்பர்கள் இணைந்து பீர் பாட்டிலால் தொழிலாளியை தாக்கி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அச்செட்டிபள்ளி பகுதியில் கூலித் தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபு தனது நண்பர்களான மகேந்திரன் மற்றும் பிரேம்நாத் ஆகியோருடன் இரவு நேரத்தில் கொதாகொண்டபள்ளி பகுதியில் இருக்கும் மதுபான கடைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மது அருந்திய பிறகு போதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது கோபமடைந்த பிரேம்நாத் பீர் பாட்டிலால் பாபுவின் தலையில் சரமாரியாக தாக்கியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாபுவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மகேந்திரன் மற்றும் பிரேம்நாத் ஆகியோரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.