Categories
தேசிய செய்திகள்

போதையில் டாடி ஆறுமுகத்தின் மகன் அடாவடி …!!

புதுச்சேரியில் குடிபோதையில் தகராறு செய்த யூடியூப் சேனல் கிராமிய சமையல் கலைஞர் டாடி ஆறுமுகத்தின் மகன் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரி முத்தயால்பேட்டையில் உள்ள ஏ.கே டார்வின் உணவகத்தில் உள்ள பாரில் நகரில் நேற்று இரவு 8.30 மணி அளவில் பிரபல யூடியூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உட்பட அவரது நண்பர்கள் 3 பேர் மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு பணிபுரிந்த ஊழியர்களை தகாத வார்த்தைகளில் திட்டி 11 மணிக்கு மேல் மது வேண்டும் எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட ஊழியரை கோபிநாத்தும், அவரது நண்பர்களும் பீர் பாட்டிலால் அடித்துள்ளனர். மேலும் ஹோட்டலில் உள்ள மற்ற பொருட்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தையால்பேட்டை போலீசார், தகராறில் ஈடுபட்ட டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உட்பட 3 பேரை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறி உள்ளனர். ஆனால் அவர்கள் செல்லாததையடுத்து ஹோட்டல் ஊழியர் கொடுத்த புகாரின் பேரில், டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உள்ளிட்ட மூவர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.

Categories

Tech |