Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

போதையில் தகராறு செய்த கணவர்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. போலீஸ் விசாரணை….!!!

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அதங்கோடு பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான அஜித் குமார்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 27-ஆம் தேதி மது போதையில் மாமனார் வீட்டிற்கு சென்ற அஜித்குமாரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபத்தில் அஜித் குமார் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கு கடந்த 2 நாட்களாக கதவு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்துள்ளனர்.

அப்போது தூக்கில் அஜித்குமார் சடலமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அஜித்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |