Categories
உலக செய்திகள்

“போதையில் தள்ளாடிய இளம்பெண்” தண்டவாளத்தில் கார் சிக்கியதால்…. பதறிய பொதுமக்கள்…!!

இளம்பெண் ஒருவர் மதுபோதையில் காரை ஒட்டி வந்து இரயில் தண்டவாளத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் மாலகா என்ற பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் உள்ள சுரங்கப்பாதையில் கார் ஒன்று வேகமாக வந்து சிக்கியுள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்த மெட்ரோ ரயில் நிர்வாகத்தினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். இதையடுத்து சுரங்கப்பாதையில் சிக்கிக் கொண்டிருந்த காரை மீட்ட போது காருக்குள் 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்யப்பட்டதில் அப்பெண் மது போதையில் இருந்துள்ளார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து வவிசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தியானது தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |