Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போதையில் படுத்து தூங்கிய தொழிலாளி….. உடல் கருகி இறந்த சோகம்….. பரபரப்பு சம்பவம்….!!

தொழிலாளி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் சுமை தூக்கும் தொழிலாளியான மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மணிகண்டன் அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையம் அருகே தகரக் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த மணிகண்டன் வீட்டில் தூங்கியுள்ளார். அந்த வீட்டில் மின்சார இணைப்பு இல்லாததால் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி ஆகியவற்றை மணிகண்டன் பற்ற வைத்துவிட்டு அருகில் இருந்த மரக்கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார்.

அப்போது மெழுகுவர்த்தி கீழே சாய்ந்து மரக்கட்டிலில் தீப்பிடித்து எரிந்ததால் மணிகண்டன் காயமடைந்தார். இதனால் கண் விழித்த மணிகண்டன் வெளியே வர முயற்சி செய்தும் போதை அதிகமாக இருந்ததால் புகைமூட்டம் காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்த மணிகண்டன் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்ற மணிகண்டனின் உடலை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |