புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளை நேற்று பள்ளி முடிந்து வேனில் வீட்டிற்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கீரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது வேன் தாறுமாறாக சென்றது.
அப்போது பள்ளி மாணவர்கள் கூச்சலிட்டதால் பொதுமக்கள் வேலை தடுத்து நிறுத்தி விசாரித்த போது ஓட்டுநர் மது போதையில் இருந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போதையில் பள்ளி வாகனத்தை ஒட்டிய அப்துல் ரியாஸ் என்பவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.