Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் போலீஸ் துணை சூப்பிரண்டை தாக்கிய நபர்… கைது செய்த போலீஸ்…!!!

போதையில் துணை போலீஸ் சூப்பிரண்டை தாக்கிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் சூப்பிரண்டாக பணியில் இருக்கும் அருளரசு ஜஸ்டின் என்பவரும் ஏட்டாக இருக்கும் குமார் என்பவரும் மயிலாப்பூர் சாலையில் ஜீப்பில் கொண்டிருக்கும் பொழுது தண்ணீர் வாங்குவதற்காக கடைக்கு அருகில் ஜீப்பை நிறுத்திவிட்டு ஏட்டு சென்றுள்ளார். ஜீப்பில் அருளரசு உட்கார்ந்திருந்த நிலையில் குடிபோதையில் ஸ்கூட்டரில் வந்த ஒருவர் ஜீப்பை நடுரோட்டில் நிறுத்தி இருக்கிறீர்கள் என தகராறு செய்துள்ளார். அதற்கு அருளரசு சாலையோரமாக தான் நிற்கிறது என கூறியுள்ளார். அதன்பிறகு ஜீப்பை எடுக்குமாறு  தகாத வார்த்தைகளால் அந்த நபர் திட்டி திட்டியுள்ளார். இதனால் ஏட்டுக்கும் அந்த நபருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

பிறகு அருளரசு போதையில் வந்த அந்த நபரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அவரையும் போதையில் வந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டி இருக்கின்றார். பின்னர் அந்த இடத்தை விட்டு போகாமல் போதையில் இருந்த அந்த நபர் எதிர்பாராத நேரத்தில் அருளசை தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார். இதனால் அருளரசு மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில் 5 சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் அந்த நபர் ராஜா அண்ணாமலைபுரத்தில் வசிக்கும் பிரின்ஸ் பேட்ரிக் என்பது தெரியவந்துள்ளது. இவரின் மேல் ஏற்கனவே பல அடிதடி வழக்குகள் உள்ளதாக சொல்கின்றனர். போதை பாட்டிலால்  அருளரசை தாக்கியதால் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற சிறையில் அடைத்து உள்ளதாக மயிலாப்பூர் போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

Categories

Tech |