Categories
சென்னை மாவட்ட செய்திகள்

போதையில் ரகளை …. குற்றவாளியுடன் மது குடித்த போலீஸ்…. கமிஷனரின் அதிரடி உத்தரவு…!!

குற்றவாளியுடன் சேர்ந்து மது குடித்து ரகளையில் ஈடுபட்ட போலீசை கமிஷனர் பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.

சென்னை மாவட்டத்தில் உள்ள வியாசர்பாடி பகுதியில் விமல்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் காசிமேட்டில் உள்ள காவல் நிலையத்தில் முதல்நிலை போலீசாராக பணிபுரிந்து வருகிறார்.  கடந்த 22-ஆம் தேதி கீழ்பாக்கம் பகுதியில் வைத்து  குற்ற வழக்கில் தொடர்புடைய லாரன்ஸ், சந்தோஷ் ஆகியோருடன் இணைந்து விமல்குமார் மது குடித்து விட்டு ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினருடன் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கீழ்பாக்கம் காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயன்ற போது விமல் குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் காவல்துறையினர் சந்தோஷ் மற்றும் லாரன்சை கைது செய்துள்ளனர். இந்நிலையில் விமல்குமார் மீதுள்ள புகாரின் அடிப்படையில் போலீஸ் கமிஷனர் அவரை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Categories

Tech |