Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

போதையில் வந்த தந்தை…. மகனின் கொடூரச்செயல்…. புதுக்கோட்டையில் பரபரப்பு…!!

தந்தையை மகன் அரிவாளால் வெட்டிக்கொன்ற  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருமயம் அருகில் அரங்கினாம்பட்டி கிராமத்தில் சுப்ரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள கிரஷர் தொழிற்சாலையில் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் சுப்பிரமணியன் தினமும்  மது அருந்திவிட்டு வீட்டில் இருப்பவர்கள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர்களுடன்  தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் வழக்கம் போல் நேற்றும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன் பிரேம்குமார் அரிவாளை எடுத்து தனது தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சுப்ரமணியன் பரிதாபமாக  உயிரிழந்தார். இதுகுறித்து பனையப்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரேம்குமாரை  கைது செய்து விசாரணை  நடத்தி  வருகின்றனர்.

Categories

Tech |