மது போதையில் மகன் தாயை கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கூடப்பாக்கம் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஜெயபால் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஜெயபால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் மல்லிகா ஜெயபாலை கண்டித்த போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த ஜெயபால் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.
இதனையடுத்து மதுபோதையில் வீட்டிற்கு திரும்பி வந்த ஜெயபால் கோபத்தில் காய்கறி வெட்டும் கத்தியால் மல்லிகாவை கொடூரமாக குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மல்லிகாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜெயபாலை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.