Categories
மாநில செய்திகள்

போதையோடு கை கொடுக்காதீர்கள்….. இந்த 2 கைகளும் சேர்ந்தால் தான் ஒழிக்க முடியும்….. முதல்வர் ஸ்டாலின் உறுதிமொழி ஏற்பு..!!

ஆசிரியர், பெற்றோர் என இந்த ரெண்டு கைகளும் சேர்ந்தால்தான் இந்த போதையின் பாதையை நாம் தடுக்க முடியும் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது. இதில் மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதன்பின் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் தான் போதை பொருள் விழிப்புணர்வை நம்மால் ஏற்படுத்த முடியும். சட்டத்தின் வழியாக அரசு என்ன செய்ய வேண்டும் என்பதை நேற்றைய தினம் இதே கலைவாணர் அரங்கத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

காலையில் 10 மணிக்கு தொடங்கி மதியம் 1.30 மணி வரைக்கும் நடைபெற்றது. அதில் அறிவுரைகள், ஆலோசனைகள் கருத்துக்கள், என்ன நிலைமை என்பது பற்றி எல்லாம் அலசி ஆராய்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க அதற்குரிய திட்டங்களை தீட்டி இருக்கிறோம். எனவே காவல் நிலைய எல்லையில் போதை மற்றும் போதை மருந்து விற்பனையை முற்றிலுமாக தடை செய்து விட்டோம் என்று ஒவ்வொரு போலீஸ் இன்ஸ்பெக்டரும் உறுதி எடுத்துக் கொண்டால் நிச்சயம் போதை நடமாட முடியாது என்று நான் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்துதான் தடுத்தாக வேண்டும். இது மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும்.. போதை மருந்தை பயன்படுத்துபவர்கள் இதிலிருந்து விடுபட வேண்டும்.. விடுபட்டவர் போதை பயன்பாட்டுக்கு எதிராக பரப்புரை செய்தாக வேண்டும்.. பெற்றோர் தங்கள் பிள்ளைகளை போதை பொருள் பயன்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.. இதே கடமை பள்ளி ஆசிரியர்களுக்கு இருக்கிறது.. இதை பணி கல்லூரி நிர்வாகத்திற்கு இருக்கிறது, வியாபாரிகள், கடைக்காரர்கள் இதை விற்க மாட்டோம் என உறுதி ஏற்க வேண்டும்.

போதையின் தீமையை மருத்துவர்கள், குறிப்பாக மனநல மருத்துவர்கள் பரப்புரை செய்ய வேண்டும். போதையில் விழுந்தவர்களை மீட்பதற்கான பணியை சமூக அமைப்புக்கள், அரசு சாரா நிறுவன தொண்டு நிறுவனங்கள் இதை செய்தாக வேண்டும். இதனை நாம் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். இதில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பங்கு மிக மிக முக்கியமானது. பாதி நேரம் பெற்றோர்கள் பாதி நேரம் ஆசிரியர்களுடன் தான் படிக்கும் காலத்தில் பிள்ளைகள் இருக்கிறார்கள். எனவே அவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய பொறுப்பு பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கிறது.. தங்கள் பிள்ளைகளோடு பெற்றோர்கள் அதிக நேரத்தை செலவு செய்யணும்.. மனம் விட்டு பேசுங்க.. பள்ளியில் என்ன நடந்திருக்கு என்று கேளுங்கள், என்ன சொல்லி கொடுத்தாங்கன்னு கேளுங்க.. இன்றைய நாள் எப்படி போச்சு.. என்ன தேவைப்படுகிறது என்று நாள் ஒன்றுக்கு பெற்றோர் பிள்ளைகளிடம் விசாரிக்க வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுங்க.. வெளியில் எங்கேயாவது போனீங்க என்றால் சேர்ந்து போங்க.. உறவினர்களை  அணுகுங்கள். குடும்ப விழாக்களில் பங்கெடுத்து, உங்கள் பிள்ளைகளோடு நேரத்தை செலவு செய்யுங்கள். குழந்தைகளோடு இயல்பாக பழகுங்கள், நண்பர்களாக அணுகுங்கள்.. அன்போடு அவரிடம் பேசுங்க.. எக்காரணத்தைக் கொண்டும் குழந்தைகளை கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.. அதே மாதிரி தான் கண்டிப்பு.. கண்டிப்பு தேவைதான்.. ஆனா அதே கண்டிப்பு ஆபத்தாக போய் முடிகிறது. அதே மாதிரி தான் கவனிப்பே இல்லாத வாழ்க்கை ஆபத்துதான்.. இதே கடமை ஆசிரியர்களுக்கும் உண்டு. நீங்கள் கண்டிப்பாக நிற்க வேண்டும்.. அதே நேரத்தில் பணிவுடன் இருக்க வேண்டும்.. மாணவர், மாணவியரின் படிப்பை தாண்டி நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும்.

முக்கால் மணி நேரம் பாட மேடையில் 5 நிமிடத்தில் பொதுவான விஷயங்களை அவர்களிடத்தில் பேசுங்கள். வகுப்பில் யாராவது சோர்வாக காணப்பட்டால் யாரிடத்திலும் ஒட்டாமல் இருந்தால் அந்த மாணவனை கூப்பிட்டு மாணவியை கூப்பிட்டு தனியாக அழைத்து பேசுங்கள்.. அவங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க.. அவங்களும் உங்க பிள்ளைகள்தான்.. அவர்கள் நல்ல விதமாக வளர்ந்தாலும் பெருமை உங்களுக்கு தான்.. கெட்டவர்களாக ஆனாலும் தாழ்ச்சி உங்களுக்கு தான்.. ஆக பெற்றோர்கள் பாதி ஆசிரியர்களாகவும், ஆசிரியர்கள் பாதி பெற்றோர்களாகவும் இருந்து மாணவர் சமுதாயத்தை வளர்த்தால் போதை போன்ற தவறான பழக்கங்கள் யாரும் ஈடுபட மாட்டார்கள்.

சட்டத்தின் காவலர்களாக போதை பொருட்களை தடுக்க மாவட்ட ஆட்சியர்களும், காவல்துறை கண்காணிப்பாளர்களும் இருப்பதைப் போல, விழிப்புணர்வின் காரணமாக பெற்றோர்களும், ஆசிரியர்களும் செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், இந்த ரெண்டு கைகளும் சேர்ந்தால்தான் இந்த போதையின் பாதையை நாம் தடுக்க முடியும். மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான்.. போதையோடு கை கொடுக்காதீர்கள்.. வாழ்க்கையே கைநழுவி போய்விடும்.. மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான் போதை பாதை அழிவு பாதை அதில் யாரும் செல்லாதீர்கள். மற்றவர்களையும் செல்ல விடாதீர்கள். மீண்டும் மீண்டும் சொல்வது இதுதான் போதைக்கு தெரிந்தது அழிவு பாதை மட்டும்தான்.. அனைவரும் பாதையை தடுக்கும் காவலர்களாக மாற வேண்டும். மேற்கத்திய நாடுகளில் போதை மருந்து பழக்கங்கள் குறைந்து, ஆசிய நாடுகளில் அதிகமாக இருப்பதாக புள்ளி விவரங்கள் நமக்கு சொல்லுது.” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |