போதையில் இருந்த நபர் போலீஸ்காரர் ஒருவரை மது பாட்டிலால் கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
சென்னை மாவட்டத்திலுள்ள கோட்டூர்புரம் குடிசைமாற்று குடியிருப்பு வாரியத்தில் மேற்கு கால்வாய் சாலையில் வசித்து வருபவர் 25 வயதுடைய விஜயராஜ். போதைக்கு அடிமையான இவர் நேற்று முன்தினம் போதையில் அந்த பகுதியில் இருக்கும் மின்சார பெட்டியிலிருந்து பியூஸ் கேரியரை பிடிங்கியதால் அங்கே மின் துண்டிக்கப்பட்டது. இதனால் அவதிப்பட்ட மக்கள் ரோந்து பணியில் இருந்த போலீசுக்கு தகவல் கொடுத்த நிலையில் விரைந்து வந்த அவர் விஜயராஜிடம் பியூஸ் கேரியரை கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் தர மறுத்து, தகாத வார்த்தையால் போலீசை திட்டியுள்ளார். மேலும் போலீசை பிடித்து கீழே தள்ளி அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளார். அப்போது தனது கையிலிருந்த மது பாட்டிலால் போலீஸான வேல்முருகனை கொலை செய்ய முயற்சித்த நிலையில் மக்களின் உதவியோடு விஜயராஜை பிடித்து போலீஸ் நிலையத்தில் அடைத்தனர். அதன் பிறகு அந்த பகுதி மக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது.