கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த மாணவர் அஜய்குமார். இவர் பிஇ இரண்டாம் வருடம் படித்து வந்துள்ளார். நண்பர்களுடன் விடுதி அறையில் தங்கி இருந்த அஜய்குமாருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது பாதி வழியில் உயிரிழந்துள்ளார். இவருடைய பிரேத பரிசோதனை அறிக்கையில் இடது முன் கையில் நரம்பு வழியாக போதை ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை ஊசி மூலம் ஏற்றியதால் இறப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மாணவர் வலி நிவாரணம் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் தண்ணீரில் கரைத்து சிரஞ்சி மூலமாக போதைக்காக தனக்குத்தானே செலுத்திக் கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாணவனின் நண்பர்களிடம் விசாரணை செய்ததில் வலி நிவாரண மருந்தை தனியார் மருந்து கடை வைத்திருக்கும் ஒருவரிடம் இருந்து மருத்துவர் பரிந்துரை இல்லாமல் லாப நோக்கத்தோடு, கடைகாரர் விற்பனை செய் தெரியவந்தது. இதனையடுத்து மருந்து விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுகிறது