Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி”…. தொடங்கி வைத்த திருவள்ளூர் டிஎஸ்பி…!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்ட சூப்பிரண்டு போலீஸ் வருண்குமார் உத்தரவினால் நேற்று போலீஸ் நிலையத்தின் சார்பாக போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் டிஎஸ்பி சந்திரதாசன் பங்கேற்று, போதை தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவங்கி வைத்து பேரணியில் அவரும் கலந்து கொண்டார்.

இந்தப் பேரணியில் சமூக ஆர்வலர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பி விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரம்பாக்கம் புதிய மேம்பாலத்தில் ஆரம்பித்து பஜார் வீதி, பஸ் நிலையம் வழியாக பேரம்பாக்கத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தின் அருகே முடித்தனர்.

Categories

Tech |