ஸ்ரீவைகுண்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் போதை தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக போலீசார் மற்றும் வேளூர் வேலு சமூக நல அறக்கட்டளை சேர்ந்து மாராத்தான் போட்டிகளை நடத்தியது. இப்போட்டியை ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
இதை அடுத்து 12 வயதுக்குட்பட்டோர், மேற்பட்டோர் என இரு பிரிவுகளாக போட்டி நடைபெற்றது 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து பொன்னங்குறிச்சி வரை போட்டி நடைபெற்றது. 12 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம், பொன்னங்குறிச்சி, வெள்ளூர் வழியாக புதுக்குடி வரை போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை தலைவர் மாசானமுத்து பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.