இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பலரும் போதை பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர் இதனால் பல குற்றச் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இந்த நிலையில் போதை தரக்கூடிய மருந்துகள் மற்றும் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாருக்கும் விற்பனை செய்யக்கூடாது என்று மருந்து கடை உரிமையாளர்களுக்கு கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் போதை தரக்கூடிய மருந்து மாத்திரைகளின் பெயர்களை எழுதி இவற்றை மருத்துவரின் ஆலோசனை இன்றி விற்பனை செய்ய இயலாது என்பதை எழுதி கடையில் ஒட்டியிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.