மருந்து கடைகளில் போலீசார் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களும், வாலிபர்களும் போதை, கஞ்சா, புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகின்றனர். இதனை தடுப்பதற்காக போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத் உத்தரவின் படி போலீசார் காமராஜர் பேருந்து நிலையம், காந்தி சந்திப்பு, அண்ணா சிலை சந்திப்பு ஆகிய முக்கிய பகுதிகளில் இருக்கும் மருந்து கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது போதை மாத்திரை, போதை ஊசி மருந்துகள் ஏதேனும் விற்பனை செய்யப்படுகிறதா? என போலீசார் தீவிரமாக சோதனை நடத்தினர். இதனை அடுத்து டாக்டர்களின் மருந்து சீட்டு இருந்தால் மட்டும்தான் மாத்திரைகள், மருந்து கொடுக்க வேண்டும் என மருந்து கடை உரிமையாளர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.