பிரான்சில் போதை பொருள்கள் கடத்துதலில் முன்னிலை வகித்த மாவட்டம் அதிரடியாக அழிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் போதை பொருள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வந்துள்ளது. இதற்கு எதிராக பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த போதை பொருள் கடத்தல் தொடர்பாக உள்துறை அமைச்சர் ஜேர்மனின் கூறியுள்ளதாவது, “நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின்பு தற்போது வரை சுமார் 3952 போதை பொருள் விற்பனை செய்த இடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது.
மேலும் காவல்துறை மற்றும் அதிகாரிகள், அத்தனை போதைப் பொருள் கடத்துபவர்களையும் கைது செய்ய வேண்டும். இதற்கிடையில் ஒவ்வொரு மாதமும் இதுதொடர்பாக விசாரித்து வருவேன் எனவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தற்போது சென் செயிண்ட் டெனிஸ் என்ற மாவட்டம் போதைப் பொருள் விற்பனையில் முன்னிலை வகித்துவருகிறது. இந்த மாவட்டத்தில் மட்டுமே இதுவரை சுமார் 276 போதைப் பொருள் விற்பனை செய்யும் இடங்கள் ஒழிக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.