Categories
உலக செய்திகள்

போதை பொருள் கடத்தல் வழக்கு…. முன்னாள் அதிபர் கைது….! ஹாண்ட்ரஸில் பரபரப்பு ….

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று  ஹோண்டுராஸ் ஆகும். இங்கு 2014  முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஜீவன் ஒர்லாண்டோ ஹெர்னேண்டிஸ் என்பவர் அதிபராக பதவி வகித்தார். இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஹோண்ட்ராசில்  இருந்து அமெரிக்காவிற்கு போதை பொருள் கடத்தல் சம்பவங்களும் அதிகரித்து வந்தது.

இதற்கு முன்னாள்  ஹாண்ட்ராஸின்  அதிபருக்கு  போதை பொருள் கும்பலுடன் தொடர்பு இருந்ததாகவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதாகவும் அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதன் காரணமாக முன்னாள் அதிபர் மீது  அமெரிக்காவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் அமெரிக்க கோர்ட்டில் ஜீவனை  ஆஜர்படுத்த உத்தரவிட்டது. இதன் காரணமாக ஜீவனை அமெரிக்காவிற்கு நாடு கடத்த ஹோண்ட்ராஸ்  அரசிடம் அமெரிக்கா கோரிக்கை விடுத்தது.

இந்த நாடு கடத்தல் விவகாரம் தொடர்பாக போன்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில் அவரை உடனடியாக கைது செய்ய கோர்ட் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் நேற்று ஜீவன் வீட்டை அதிரடியாக சுற்றிவளைத்தனர். மேலும் வீட்டிலிருந்த  ஜீவனை போலீசார்  கைது செய்தனர். போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முன்னாள் அதிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |