கொச்சியில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய மலையாள நடிகை அஸ்வதி பாபு, காதலனுடன் கைது செய்யப்பட்டார். திருவனந்தபுரம் தும்பா பகுதியை சேர்ந்தவர் நடிகை அஸ்வதி பாபு (26), ஏராளமான மலையாள படங்கள், டிவி தொடர்களில் நடித்துள்ளார். நேற்று மாலை கொச்சி குசாட் சந்திப்பு அருகே நடிகை அஸ்வதி பாபு, காதலன் நவுபல்வுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது 2 பேரும் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல அந்த கார் அதிவேகத்தில் பாய்ந்து சென்றது.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் சிலர் அந்த காரை விரட்டினர். ஒரு வாலிபர் பைக்கில் துரத்தி சென்று காரை வழிமறித்தார். அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக காரை வேகமாக இயக்கியபோது, கல்லில் டயர் மோதி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் நடிகை அஸ்வதி பாபுவும், நவுபலும் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். அங்கு வந்த போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது, இருவரும் போதையில் இருந்தது தெரியவந்தது.