Categories
சேலம் மாவட்ட செய்திகள்

போதை பொருள் விற்பனை…. தாய் மகன் உள்பட 8 பேர் கைது …. காவல்துறையினர் அதிரடி வேட்டை…!!

 கஞ்சா விற்ற குற்ற்றத்திற்க்காக    தாய் மகன் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் கஞ்சா போன்ற போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாகவும், இதனால் குற்ற செயல்கள் அதிகரிப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனை விசாரித்த கமிஷனர் செந்தில்குமார் கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்களை பிடிக்க சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டபோது சேலம் பகுதியில் கஞ்சா விற்ற காதர் ஷரிப் என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் போல் கிச்சிபாளையம் பகுதியில் 62 வயதான தாய்  மற்றும் அவருடைய மகன் வெள்ளையன் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து இரண்டரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அம்மாபேட்டையில் ஆகாஷ் குமார், ஹரி, விக்ரம்,  ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 கிராம் கஞ்சாவும், கொண்டலாம்பட்டி சிதம்பரம் என்பவரிடமிருந்து 550 கிராம் கஞ்சாவும், அன்னதானப் பட்டியில் ராகு என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தமாக ஏழு கிலோ 600 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போலீசார் தொடர்ந்து போதை பொருள்கள் விற்பவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |