Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் இறப்பு… சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்த மனைவி…!!!

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் உயிரிழந்தது தொடர்பாக அவரது மனைவி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

கடலூர் மாவட்டம், தூக்கணாம்பாக்கம் அடுத்துள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் வசித்து வந்தவர் பார்த்திபன்(40). இவருக்கு பெரியநாயகி(33) என்ற மனைவியும், ஹேமாஸ்ரீ(7), பிரகஸ்ரீ(4) என்ற 2 மகள்களும் உள்ளார்கள். பார்த்திபன் மது குடிக்கும் பழக்கம் உடையவர். இதனால் திண்டிவனம் பாஞ்சாலம் ரோட்டில் உள்ள குடிபோதை மற்றும் மன நோய் சிகிச்சை மையத்தில் மது குடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்காக சிகிச்சை பெற கடந்த மாதம் 14-ஆம் தேதி சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி அன்று அதிகாலை 5 மணிக்கு சிகிச்சை மையத்திலிருந்து பெரியநாயகியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய நபர் பார்த்திபனுக்கு வலிப்பு வந்து திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கூறினார். இதனையடுத்து பெரியநாயகி ஜிப்மர் மருத்துவமனைக்கு சென்று தனது கணவரை பார்த்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனில்லாமல் பார்த்திபன் உயிரிழந்தார்.

இதைக்கேட்டு பெரியநாயகியும் அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்து உள்ளார்கள். இந்நிலையில் தனது கணவரின் உடலில் காயங்கள் இருக்கிறது. அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி ரோஷனை காவல் நிலையத்தில் பெரியநாயகி புகார் கொடுத்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |