போதை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் ஜல்லி, சிமெண்ட், கம்பிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் போதை பழக்கத்திற்கு அடிமையான பழனியை புழல் அந்தோணியார் கோவில் தெருவில் இருக்கும் தனியார் போதை மீட்பு மையத்தில் அவரது குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து பழனி அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.