Categories
தேசிய செய்திகள்

போதை வெறியின் உச்சம்…. கஞ்சா கிடைக்காத கோபம்…. 20 சென்டிமீட்டர் நீள கத்தியை முழுங்கிய வாலிபர்….!!

கஞ்சா கிடைக்காத கோபத்தால் போதைக்கு அடிமையானவர் 20 செ.மீ நீளம் கொண்ட கத்தியை விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அரியானா மாநிலத்தில் போதைக்கு அடிமையாகி 28 வயது வாலிபர் ஒருவர் சென்ற ஒன்றரை மாதத்திற்கு முன்னர் கஞ்சா கிடைக்காத கோபத்தால் சமையலறையில் இருந்த கத்தியை விளங்கியுள்ளார். 20 செ.மீ நீளம் கொண்ட அந்த கத்தி வயிற்றுக்குள் சென்ற நிலையில் அவருக்கு எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை. சில நாட்களுக்குப் பின்னர் அவருக்கு அதிக பசி மற்றும் வயிற்று வலி உண்டாகி உள்ளது.அதனால் அவரை உடனடியாக அவரது குடும்பத்தினர் டெல்லியில் இருக்கின்ற எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவர்கள் அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் கத்தி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன் பின்னர் அவரது குடும்பத்தினருக்கு இந்த உண்மை தெரிந்தது.

இதனைத்தொடர்ந்து உடனடியாக அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர். பித்த காலத்திற்கு மிக அருகில் கத்தி இருந்ததால், உயிருக்கு ஆபத்தை உண்டாகும் நிலை இருந்தது. இத்தகைய சிக்கலான அறுவை சிகிச்சையை எய்ம்ஸ் மருத்துவர்கள் மூன்று மணி நேரத்திற்கு மேலாக செய்து முடித்து கத்தியை அகற்றினார்கள். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது உடல் நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும் போது, ஒரு நபர் முழு கத்தியை விழுங்கி உயிர் பிழைத்துள்ளது இதுவே முதல் சம்பவம் என கூறியுள்ளனர். மேலும் இதுவரை ஊசி, நூல் மற்றும் மீன் கொக்கி போன்ற கூர்மையான பொருட்களை விழுங்கிய மூன்று முதல் நான்கு கேஸ்களை மட்டுமே பார்த்து இருப்பதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |