நயன்தாராவின் 75 ஆவது திரைப்படத்தை இயக்கும் நிலேஷ் கிருஷ்ணாவுக்கு ரஜினிகாந்த் போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் தற்பொழுது புதுமுக இயக்குனர் நிலேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் போடப்பட்டது. இந்த நிலையில் ரஜினிகாந்த் இயக்குனர் நிலேஷுக்கு தொடர்பு கொண்டு வாழ்த்தி உள்ளார்.
இது பற்றி நிலேஷ் கிருஷ்ணா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ஒன் அண்ட் ஒன்லி தலைவர் சூப்பர் ஸ்டாரின் மேஜிக்கல் அழைப்புடன் என் முதல் படமான லேடிஸ் சூப்பர் ஸ்டார் 75 பூஜை தொடங்கியுள்ளது. அவர் வாழ்த்தினார். ஆசி வழங்கினார். நாங்கள் வேலையை துவங்கினோம். இதைவிட என்ன வேண்டும், ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றேன் இறைவா என கூறியுள்ளார். நயன்தாராவின் 75 வது திரைப்படம் அவரின் பழைய திரைப்படங்கள் போல் இல்லாமல் புதிதாக இருக்கும் என இயக்குனர் கூறியுள்ளார். இத்திரைப்படமானது நயன்தாராவை மையமாக வைத்து எடுக்கப்படுகின்றது.