Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

போனை கட் செய்த கணவர்…. வேதனையில் புதுப்பெண் தற்கொலை…. திருமணமாகி 9 மாதத்தில் சோகம்…!!!

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பர்மா காலனி என்ற பகுதியில் வசித்து வருபவர் ஜெகதீஸ். இவர் கடந்த மே மாதம் ஜெபசீலி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தனியார் நிதி நிறுவனத்தின் வேலை செய்து வரும் ஜெகதீஸ், வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெகதீஸின் அம்மா, தங்கை ஆகிய இருவரும் ஜெபசீலிக்கு தொந்தரவு கொடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து, கணவரிடம் பேச செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் கட் செய்துள்ளார். இதனால் வேதனையடைந்த ஜெபசீலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |