சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றிருக்க வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வார்டு வரையறை போன்ற சில காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. இதனை அடுத்து நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல்களில் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்யும் முனைப்பில் அனைத்து கட்சிகளும் செயல்பட்டு வருகின்றன. திமுக எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே போய் வேட்பாளர்களை முடிவு செய்து விட்டது என கூறப்படுகிறது. இதனையடுத்து திமுகவில் வேட்பாளர்களை தேர்வு செய்யும்போது உளவுத்துறை அளித்த தகவலின்படி மாவட்ட செயலாளர் சிலரிடம் ஸ்டாலின் தொலைபேசி மூலம் பேசியதாக கூறப்படுகிறது. அதோடு திமுகவைப் பொறுத்தவரை உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கடந்த நவம்பர் மாதமே விருப்ப மனுக்கள் பெறப்பட்டு தற்போது நேர்காணல் நடைபெற்று வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியில் வேட்பாளர்கள் வகித்து வரும் பொறுப்பு அதோடு அவரவர்கள் எவ்வளவு செலவு செய்வார்கள் என்பதைப் பொருத்து வேட்பாளர் இறுதி பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து திமுகவை சேர்ந்த ரகசியமாக செயல்பட்டு வரும் சிலர் வேட்பாளர்கள் கொடுத்த விபரங்களை தமிழகம் முழுவதும் உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் தாங்கள் கொடுத்த விபரமும் ஸ்டாலின் கண்டறிந்த விபரமும் நன்றாக இருக்கிறதா என அலசிப் பார்த்து வேட்பாளர் பட்டியலை ஸ்டாலின் தயார் செய்துள்ளாராம். அதோடு கட்சியில் பதவியில் உள்ளவர்கள் சிலர் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதாகக் கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கியது முதல்வருக்கு தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து முதல்வர் அவர்களுக்கு நேரடியாக தொலைபேசியில் மிரட்டல் விடுத்தார் என கூறப்படுகிறது. உங்கள் தொகுதியில் கட்சி வெற்றி பெறவில்லை என்றால் அடுத்த நிமிடமே உங்கள் பதவி பறிக்கப்படும் என கூறினாராம். இதனால் பல மாவட்ட செயலாளர்கள் நடுநடுங்கிப் போய் உள்ளனர்.