இந்து முன்னணி சார்பாக சென்னை மதுரவாயல் பகுதியில் இந்துக்க்களின் உரிமை மீட்பு பிரச்சாரம் பயணம் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல தமிழ் திரைப்பட ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களின் வேகமாக பரவியது. இந்நிலையில் பெரியார் சிலை உடைப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால், அவர் தலைமறைவு ஆகியுள்ளார்.
அவரின் செல்போன் எண்ணிற்கு போலீசார் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்துள்ளது. இந்நிலையில், தான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்பதால், முன் ஜாமின் கோரி கனல் கண்ணன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.