தொழிலாளியை தாக்கிய குற்றத்திற்காக சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் காமராஜர் நகரில் மலர்கொடி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான சரத்குமார் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் ரசிக்கும் சகோதரர்களான கண்ணன், சதீஷ் ஆகியோருக்கும், சரத்குமாருக்கும் இடையே போன் பேசியது தொடர்பாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் இணைந்து சரத்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து சரத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கண்ணன் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.