Categories
தேசிய செய்திகள்

போன் பே பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. புதிய அசத்தலான வசதி அறிமுகம்….!!!!

தற்போது தங்கம் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தங்கம் என்பது மிகப் பெரிய முதலீட்டு கருவி. முதலீட்டு நோக்கத்திற்காக தற்போது நிறைய பேர் தங்கம் வாங்குகிறார்கள்.பெரிய தொகையை கொடுத்து தங்கத்தை வாங்குவது சிரமம். ஆனால் டிஜிட்டல் தங்கமாக நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். நீங்கள் ஒரு ரூபாய்க்கு கூட தங்கம் வாங்க முடியும். போன்பே மொபைல் ஆப்பில் இந்த புதிய வசதி உள்ளது. கூகுள் பே, பேடிஎம் போன்ற மற்ற செயல்களிலும் இதற்கான வசதி உள்ளது.

தங்கத்தின் விலை திடீரென உயரும்போது போன்பே செயலியில் சேமித்து வைத்திருக்கும் தங்கத்தை நீங்கள் விற்றுவிடலாம். அதற்கான தொகை அப்படியே உங்களது கணக்கில் டெபாசிட் செய்யப்படும். தங்க நாணயம் ஆக கூட நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும். தங்க நாணயம் வாக்கினால் அது உங்களுடைய முகவரிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இந்த டிஜிட்டல் தங்கம் முதலீடு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது 24k மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை போன்பே அறிமுகம் செய்துள்ளது.

Categories

Tech |