போப் பிரான்சிஸ் இறுதிவரை போப்பாண்டவராக இருந்து ரோமிலே தன்னுயிர் போகவேண்டும் என்று ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார் .
84 வயதான போப் பிரான்சிஸ் பற்றிய தகவல்களுடன்’ தி ஹெல்த் ஆப் போப்ஸ் ‘என்ற புத்தகம் சனிக்கிழமை வெளிவந்தது. அதில் அர்ஜென்டினாவின் இத்தாலிய குடியேறியவர்களுக்கு பிறந்த ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ (போப் பிரான்சின் இயற்பெயர் ) அவர் தனது கடைசி காலத்தில் சொந்த நாட்டிற்கு செல்ல ஆசை இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் அவரின் உடல்நிலை தற்போது அதிக ஆபத்தில் உள்ளதாக கருதுகிறார். அவர் தனது 21 வயதில் பிளேயரிசி என்ற நோயால் அவதிப்பட்டு உள்ளதாக கூறியுள்ளார். அதனால் அவரின் வலது நுரையீரல் அகற்றப்பட்டதாகவும் கூறியுள்ளார்.