Categories
மாநில செய்திகள்

“போயஸ்கார்டனில் காலத்தை கழிப்பதே அவர் எண்ணம்”… வருத்தத்தில் சசிகலா..!!

போயஸ்கார்டனில் தனது இறுதிக் காலத்தை கழிப்பதே சசிகலாவின் எண்ணம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து வெளியான சசிகலா பிப்ரவரி எட்டாம் தேதி தமிழகம் வந்தார். தமிழகத்தில் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு வழங்கப்பட்டது. இதையடுத்து முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று கூறிய சசிகலா அதன்பின் அமைதியாகிவிட்டார்.

அரசியல் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் அறிக்கை வெளியிட்டார். இந்நிலையில் ஜெயலலிதாவின் நினைவிடத்திலேயே போயஸ்கார்டனில் காலத்தை கழிக்க வேண்டும் என்பதுதான் சசிகலாவின் எண்ணம் என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். வேதா இல்லத்துக்கு எதிரிலேயே வீட்டை கட்ட தொடங்கியதாகவும், சொத்து இருந்து என்ன பயன்? சுதாகரனின் மீட்க 10 கோடி ரூபாய் புரட்ட முடியவில்லை என்று அவர் வேதனை பட்டதாகவும் கூறினார்.

Categories

Tech |