Categories
தேசிய செய்திகள்

போயிங் பி737 விமான விமானியின் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து…. டிஜிசிஏ வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் விமானியின் உரிமத்தை சிவில் விமானப்போக்குவரத்து இயக்குநரகமானது 6 மாதங்களுக்கு இடைநிறுத்தி இருக்கிறது என வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளது. மே மாதம் முதல் தேதியன்று SG-945 எனும் போயிங் B737 விமானமானது வானில் பறந்துக் கொண்டிருந்தது. அப்போது மேகங்களை தவிர்த்து விமானத்தினை பறக்கச் செய்யலாம் எனவும் மேகங்களின் வழியே பறக்கவிட வேண்டாம் எனவும் தலைமை விமானியிடம், துணைவிமானி கேட்டுக் கொண்டார். எனினும் அதனை கேப்டன் விமானி புறக்கணித்துவிட்டார். மும்பை- துர்காபூருக்கு SG-945 எனும் போயிங்B737 இயக்கப்பட்டு வரும் விமானம், இறங்கும் நேரத்தில் கடும் கொந்தளிப்பை எதிர் கொண்டது.

இதன் விளைவாக ஒருசில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டது. விமானத்தில் 2 விமானிகள் மற்றும் 4 கேபின் பணியாளர்கள் உட்பட மொத்தம் 195 நபர்கள் இருந்தனர். மும்பையிலிருந்து மாலை 5:13 மணியளவில் விமானம் புறப்பட்டது. விமானம் தரையிறங்கும் போது மிகவும் குலுங்கியது. அத்துடன் செங்குத்து சுமை காரணி +2.64G மற்றும்  1.36G வரை மாறுபட்டது. இக்காலகட்டத்தில் தன்னியக்க பைலட் 2 நிமிடங்களுக்கு செயலிழந்துவிட்டது மற்றும் பணியாளர்கள் விமானத்தை இயக்க நேர்ந்தது என் டிஜிசிஏ தெரிவித்தது. மே 2 அன்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்ட அறிக்கையில் இச்சம்பவம் பற்றி இவ்வாறு கூறப்பட்டிருந்தது. எனினும் அது குறித்த விசாரணைக்கு பின், விமான கேப்டனின் ஓட்டுநர் உரிமத்தை 6 மாதங்களுக்கு ரத்துசெய்யும் முடிவு இன்றுதான் உறுதிபடுத்தப்பட்டது.

Categories

Tech |